Tuesday, August 11, 2009

முதல் பூ

களம் :
காதலிக்கு கொடுக்கும் முதல் பூவுடன் இணைக்க வேண்டிய கவிதை .


காதலியே ,
உன் கண்கள் , தன் ஈர்ப்பு விசையில்
பால் வெளி கிரகங்களை தடம் மாறி
சுற்ற செய்யும் வல்லமை கொண்டது
ஆதலால் , இரவில் நிலவின் அழகை ரசிக்க
முயலாதே .

நிலவுக்கு நீ ஒன்னும் குறைந்தவள் இல்லை
உனக்கு தெரியாது
நிலவொளி மட்டுமே பட்டு மலரும்
மந்தாரை ,அன்று உன் நிழல் பட்டு
மலர்ந்தது

அது மட்டுமா , உன் கூந்தல் சேர நினைத்து
படர்ந்து வளரும் மல்லிகை ?
எங்கு நீ உடல் வருத்தி
குனிந்து பறிக்க வேண்டி இருக்குமோ
என்று ,உன் உயரதிற்கு கிளை
வளர்த்து நிர்கறது

பண்ணிரண்டு வருடத்திற்கு
ஒருமுறை பூக்கும் குறிஞ்சி ?
உனக்காக தினமும் பூக்கிறது

வாசம் இல்லா கனகாம்பரம் ?
உன் கூந்தல் சேர எண்ணி
என்றுமே வாசம் வீச ,ஒற்றை காலில்
தவம் இருக்கிறது

உன்னை சேர ,இப்படி பட்ட
இயற்கையின் முயற்சிகளே
தோல்வியடையும் போது,
நான் எப்படி உன்னை
கவர முடியும் ?

உடனே ஒரு ஒப்பந்தம் செய்தேன்
ஆம் அந்த மலர்களோடு தான்
நான் அந்த மலர்களை உன் கூந்தல் சேர்பேன்
அவை, என் காதலை உன் காதில்
அழாகை சொல்லும்

இதோ என் முதல் தூது
இந்த ரோஜா .

No comments: