Saturday, January 16, 2010

நானும் காத்திருபேன்


இலைகளை உதிர்த்து நிர்வானமாய்

குளிர் பணியை மொத்தமாய் விழுங்கும்
மரங்களின் இடையில்
நான் ...
உன் இதழ் முத்ததின் இதம் தேடி
போர்வைக்குள் நிர்வானமானேன்

விடியும் வரை இருள் குடித்து ,
உன் மயக்கம் தெளியாமல்,கனவில்
நானும் நின்றேன் மரங்களுடன்

வெண் பணியுடன் காதல் செய்யும்
மரத்தின் கொஞ்சல் கேட்டேன்

மரம் கேட்டது
"அடி காதலியே, சூரியன் வந்து
உன் முத்தங்களை களவாடும்
போது நான் என்ன செய்வேன் சொல் "

பனி சொன்னது
"உருகி உருகி அழுவாய் "

"இல்லை "

"புயல் வீசி என்னை தேடுவாய் "

"இல்லை "

'நிலம் துறந்து உயிர் துறப்பாய் "

"இல்லவே இல்லை "

"பின்பு "

"இலை வளர்த்து , அதில் பல
வாசனை மலர் விட்டு
கனி பெற்று ,
சிட்டு குருவியின் கூடுகள்
கொண்டு அலங்கரித்து ,
உனக்காக பூங்கொத்துகளுடன்
தவம் போல் காத்திருபேன்"
என்றது

நானும் காத்திருபேன்
உனக்காக .

உதவி : முரளிகுமார்

2 comments:

Arun Radhakrishnan said...

தலை மகனுக்காக காத்திருக்கும் கருவுற்ற தாய்க்கும்
தலைவிக்காக காத்திருக்கும் தலைவன்னுக்கும்
காத்திருப்பது சுகம்தான்...

அது கடுமையாக சுடும் என்பது
இவளைகேள் கேள்

புறநனுர்று படலை பாடி
புற முதுகு கட்டாதே என்று தவ
புதல்வனை தழுவி வெற்றி திலக மிட்டு
புரவில் அனுபிவிட்ட கிழவி....

janani ganeshram said...

இலை வளர்த்து , அதில் பல
வாசனை மலர் விட்டு
கனி பெற்று ,
சிட்டு குருவியின் கூடுகள்
கொண்டு அலங்கரித்து ,
உனக்காக பூங்கொத்துகளுடன்
தவம் போல் காத்திருபேன்"

best and touchin line
very nice thalaiva