Friday, January 22, 2010

என் கவிதைகள்

நான் எழுதி இருக்க வேண்டிய
கவிதைகள் எல்லாம்
இப்போது எங்கோ ஒரு repository இல்
வெறும் கோடுகளாய் (Code)

Monday, January 18, 2010

Enna koduma sir ithu - Balti 2



Athu sari ithaya thangigitom balti -1



Saturday, January 16, 2010

நானும் காத்திருபேன்


இலைகளை உதிர்த்து நிர்வானமாய்

குளிர் பணியை மொத்தமாய் விழுங்கும்
மரங்களின் இடையில்
நான் ...
உன் இதழ் முத்ததின் இதம் தேடி
போர்வைக்குள் நிர்வானமானேன்

விடியும் வரை இருள் குடித்து ,
உன் மயக்கம் தெளியாமல்,கனவில்
நானும் நின்றேன் மரங்களுடன்

வெண் பணியுடன் காதல் செய்யும்
மரத்தின் கொஞ்சல் கேட்டேன்

மரம் கேட்டது
"அடி காதலியே, சூரியன் வந்து
உன் முத்தங்களை களவாடும்
போது நான் என்ன செய்வேன் சொல் "

பனி சொன்னது
"உருகி உருகி அழுவாய் "

"இல்லை "

"புயல் வீசி என்னை தேடுவாய் "

"இல்லை "

'நிலம் துறந்து உயிர் துறப்பாய் "

"இல்லவே இல்லை "

"பின்பு "

"இலை வளர்த்து , அதில் பல
வாசனை மலர் விட்டு
கனி பெற்று ,
சிட்டு குருவியின் கூடுகள்
கொண்டு அலங்கரித்து ,
உனக்காக பூங்கொத்துகளுடன்
தவம் போல் காத்திருபேன்"
என்றது

நானும் காத்திருபேன்
உனக்காக .

உதவி : முரளிகுமார்