Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

Saturday, January 16, 2010

நானும் காத்திருபேன்


இலைகளை உதிர்த்து நிர்வானமாய்

குளிர் பணியை மொத்தமாய் விழுங்கும்
மரங்களின் இடையில்
நான் ...
உன் இதழ் முத்ததின் இதம் தேடி
போர்வைக்குள் நிர்வானமானேன்

விடியும் வரை இருள் குடித்து ,
உன் மயக்கம் தெளியாமல்,கனவில்
நானும் நின்றேன் மரங்களுடன்

வெண் பணியுடன் காதல் செய்யும்
மரத்தின் கொஞ்சல் கேட்டேன்

மரம் கேட்டது
"அடி காதலியே, சூரியன் வந்து
உன் முத்தங்களை களவாடும்
போது நான் என்ன செய்வேன் சொல் "

பனி சொன்னது
"உருகி உருகி அழுவாய் "

"இல்லை "

"புயல் வீசி என்னை தேடுவாய் "

"இல்லை "

'நிலம் துறந்து உயிர் துறப்பாய் "

"இல்லவே இல்லை "

"பின்பு "

"இலை வளர்த்து , அதில் பல
வாசனை மலர் விட்டு
கனி பெற்று ,
சிட்டு குருவியின் கூடுகள்
கொண்டு அலங்கரித்து ,
உனக்காக பூங்கொத்துகளுடன்
தவம் போல் காத்திருபேன்"
என்றது

நானும் காத்திருபேன்
உனக்காக .

உதவி : முரளிகுமார்

Saturday, August 01, 2009

சந்திராயன் காதல்

வெண் நிலவே,நான் சந்திராயன்
இயந்திரமாய் இருந்த நான்
உன் அருகில் வந்ததும் மந்திரமாய் உயிர்த்து எழுந்தேன்
உன் வாசம் எனக்கு சுவாசம் .

உன் புகைப்படம் எடுத்து பூமிக்கு
அனுப்ப எனக்கு கட்டளை .
உன் புகை படம் எடுத்தேன்
அதை எனக்கு மட்டும் வைத்து கொண்டேன்

நான் சரியாக இயங்கவில்லை என்றார்கள் ,
உன்னை எபோதும் கரையோடு பார்க்கும் அவர்களுக்கு
எப்படி தெரியும் , உன் கள்ளம் இல்லா அழகின் அதிர்வுகளும்
அதனால் நான் அடைந்த பாதிப்பும் ?

இல்லை , உன்னை சூரியனை விழுங்கும் பாம்பாய்
சித்தரித்தவர்களுக்கு தான் புரியுமா , உன்
அன்பு ,நிழல் கொடுக்கும் அன்பு

எனக்கு தெரியும் , உனக்கு ஒரு காதலன் உண்டு
அவன் பெயரும் தெரியும்,
நீ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அழைத்தாலும்
அவன் வருவது நடக்காது
அவன் கர்வம் அவனை விடாது

கரை ஓரத்தில் உன்னை காதலிப்பதாய்
ஆடி , ஓடி சொன்னாலும்
அவன் உள்ளத்தில் நீ இல்லை
ஆம் ஆழ்கடலில் அலை இல்லை

இதோ உன்னை தேடி நான் வந்திருகிறேன்
இப்போதே சொல்
என் காதலை ஏற்றுகொள்

இல்லையேல்
"தரை இரங்கும் போது வேகம் குறைக்கும்
குடை இயங்காமல் , மடிந்தது சந்திராயன் "
என்று என் தற்கொலை செய்தி
நாளை பூமியெங்கும் ஒளிபரப்பாகும்

Friday, July 31, 2009

பால்வாடி கனவுகள் - 2

நீ என் நோட்டுல போட்ட படத்த
நான் இன்னும் அழிக்வே இல்

பால்வாடி கனவுகள் - 1

நீ கடிச்சு பாக்கி வெச்ச மிடாய்
இன்னும் இனிப்பா இருக்கு

அமெரிக்காவின் நாட்டுபுற பாடல்

கண்ணனுக்கு எதிர
தினுசு தினுசு புதுசு
அனாலும்
ஒரே எடத்துல சிக்கின
ஒலி நாடாவா
உன் நினைவுகளை விட்டு
அகல மறுக்குது மனசு

இங்க இருந்தா சம்பாதிக்கலாம்
காசு
தவறாம கிடக்கும்
மௌசு
ஆனா என்
லைப்ல போனது ப்யுசு

வாழ்க பூரா உன் அன்பு
கேடக்க கட்டினே சந்தா
எனக்கு என்ன கிடக்கும்
இங்க வந்தா

கண்ணனுக்கு எட்டாத
துரதுல நீ இருக்க
அந்த வலியா
என்ன செஞ்சு நா பொருக்க

காத்தடிச்சா பறக்கும்
காத்தாடி
உன்ன நன் பிரிஞ்சு வாடினது
போதும் எம்மாடி

ஸ்கூல் நாட்கள் லவ் லெட்டர் - 4

எனக்கு இந்த கால் பரிட்ச அர பரிட்ச எதுவுமே புடிக்காது
ஏன் தெரியுமா ,
அது எல்லாம் முடிஞ்ச ஒன்ன லீவ் விடுவாங்க தெரியுமா ,
அந்த நாள் எல்லாம் உன்ன பாக்க முடியாதுல ,அது நாலா தா

அத விட முழு பரிட்ச ரொம்ப பிடிகாது , ஏன் சொல்லு
நீ பாஸ் ஆய்ட்டு அடுத்த கிளாஸ் போய்டுவ, ஆனா நான் மட்டும்
இதே கிளாஸ் தா

ஸ்கூல் நாட்கள் லவ் லெட்டர் - 3

சூ போடறதுக்கு முனாடி போடறது socks
எனக்கு தேவ உன்னோட looks

முருகனுக்கு தூக்கிறது காவடி
நீ என்ன பாகலன பசங்க அடிப்பாங்க காமெடி

பொய் சொன்னா சாமி கண்ண குத்தும்
உன்ன பாத்தாலே என் மனசு உன் பேர சொல்லி கத்தும்

பல்லி நிக்கறது wall
உன்ன பாகர்த்து காண்டி நான் எதிர்பர்கறது இன்டெர்-wall

நீ கணக்குல எடுப்ப நூரு
அத நான் காதல் ல எடுக்ற வெயிட் பன்னி பாரு

நீ வேற நான் வேற
ஆனா நெம்ப ரெண்டு பேரும் இல்ல வேற

உங்க அப்பா அம்மா நமக்கு எதிரி
அட அத பத்தி கவல படாத நீ ஜிகிடி

ஸ்கூல் நாட்கள் லவ் லெட்டர் - 2

இன்னா படிச்சாலும் புரியாதது நால
நீ இங்கிலீஷ்

நான் பேசறது தமில்ன்றது நால
நீ தமில்

என்ன கணக்கு பண்ணாலும் நீ மடங்காதது நால
நீ மாத்ஸ்

உனக்கு எனக்கு கய்மிஸ்த்ரி வோர்கௌட் ஆனது நால
நீ சயின்ஸ்

நீ எப்ப பாத்தாலும் சண்ட போடறது நால
நீ History

என் மனசு எல்லாம் நீ இருக்கிறது நால
நீ ஜியோக்ராபி

ஆக மொத்தம் எனக்கு நீ தா
பள்ளிக்கூடம்

ஸ்கூல் நாட்கள் லவ் லெட்டர்

திரும்ப திரும்ப சண்ட போட்டா
கஜினி

பறந்து பறந்து அடிச்சா
ரஜினி

வேகமா கணக்கு போட்டா
கணினி

ஒத்த பார்வைல ஆள மடகினா
அது நீ

அமெரிக்காவின் அழகு

விக்கல் எடுக்கும்போதும்
தும்மல் வரும்போதும்
எனக்கு தெரியும்

நான் கண்டங்களின்
எல்லையை தாண்டி
வந்திருந்தாலும்

என்றும்,எங்கும் , உன் அன்பின்
எல்லைக்குள் தான்
என்று

-- இப்படிக்கு ,
உன்னை பிறிந்ததால்
அமெரிக்காவின் அழகை
ரசிக்க தெரியாத
கணவன்