சந்திராயன் காதல்
வெண் நிலவே,நான் சந்திராயன்
இயந்திரமாய் இருந்த நான்
உன் அருகில் வந்ததும் மந்திரமாய் உயிர்த்து எழுந்தேன்
உன் வாசம் எனக்கு சுவாசம் .
உன் புகைப்படம் எடுத்து பூமிக்கு
அனுப்ப எனக்கு கட்டளை .
உன் புகை படம் எடுத்தேன்
அதை எனக்கு மட்டும் வைத்து கொண்டேன்
நான் சரியாக இயங்கவில்லை என்றார்கள் ,
உன்னை எபோதும் கரையோடு பார்க்கும் அவர்களுக்கு
எப்படி தெரியும் , உன் கள்ளம் இல்லா அழகின் அதிர்வுகளும்
அதனால் நான் அடைந்த பாதிப்பும் ?
இல்லை , உன்னை சூரியனை விழுங்கும் பாம்பாய்
சித்தரித்தவர்களுக்கு தான் புரியுமா , உன்
அன்பு ,நிழல் கொடுக்கும் அன்பு
எனக்கு தெரியும் , உனக்கு ஒரு காதலன் உண்டு
அவன் பெயரும் தெரியும்,
நீ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அழைத்தாலும்
அவன் வருவது நடக்காது
அவன் கர்வம் அவனை விடாது
கரை ஓரத்தில் உன்னை காதலிப்பதாய்
ஆடி , ஓடி சொன்னாலும்
அவன் உள்ளத்தில் நீ இல்லை
ஆம் ஆழ்கடலில் அலை இல்லை
இதோ உன்னை தேடி நான் வந்திருகிறேன்
இப்போதே சொல்
என் காதலை ஏற்றுகொள்
இல்லையேல்
"தரை இரங்கும் போது வேகம் குறைக்கும்
குடை இயங்காமல் , மடிந்தது சந்திராயன் "
என்று என் தற்கொலை செய்தி
நாளை பூமியெங்கும் ஒளிபரப்பாகும்
No comments:
Post a Comment